யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள சோஷலிசம் இளைஞர் சங்கம்
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ். தேவி புகையிரதத்தில் நாளையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நாளை காலை 06.40 மணிக்கு பயணம் ஆரம்பமாகி, மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
நூல்கள் வழங்கும் நிகழ்வு
குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அதுபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
