அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: எதிர்கட்சி தலைவரை நாடிச் செல்லும் சமூக அமைப்பினர்(Photos)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் கைது செய்வதற்கு எதிராக வியா வன் அமைப்பு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்டுவது தொடர்பில் எதிர்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடுவதற்காக இன்று(25) அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது எந்த விதமான ஜாதி,மத,பேத வேறுபாடுடைய அமைப்பும் இந்த நாட்டில் தலைமை வகிக்காமல் எல்லா மொழிகளையையும் மதங்களையும் ஒற்றுமையாக செயற்பட வைக்கும் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர் கட்சி தலைவரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த வியா வன் அமைப்பானது தமிழ்,சிங்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
மேலும் நாட்டின் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை வழிபடுத்துவதற்காக இந்த குழு செயற்படும் என கூறியுள்ளனர்.




