சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் - ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மூலம் அவர்களுடன் அரட்டை அடித்து, போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி அந்த ஆண்களை மிஹிந்தலை பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
பின்னர், காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களில் கட்டி வைத்து, அடித்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடிக்கப்படுகின்றது.
நால்வர் கைது
இதற்கு தொடர்புடைய ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மேலும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், அனுராதபுரம், அசோகபுர, விஜயபுர மற்றும் கெகிராவ பகுதிகளை சேர்ந்த 21, 27 மற்றும் 32 வயதுடைய மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
முறைப்பாடு
2 பிரதேசங்களை சேர்ந்த இருவர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது காதலி மிஹிந்தலை நகரத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அவர் வந்த பிறகு, அவரும் ஒரு குழுவினரும் அவரைத் தாக்கி, மரத்தில் கட்டி வைத்து, அவரது மோட்டார் சைக்கிள், பணம், கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களில் உயர் மட்ட வேலைகளில் பணியாற்றிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri