சீஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்
சமூக ஊடக செயற்பாட்டாளரும் தொலைக்காட்சி நாடக இயக்குனருமான சுதத்த (Sudaththa Thilakasiri) திலக்கசிறி, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு நடத்தும் விசாரணைக்கு அமைய அவர், அழைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் திலக்கசிறியை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு திணைக்களத்தின் கொழும்பு கோட்டையில் உள்ள புதிய செயலக கட்டடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுதத் திலக்கசிறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த கலைஞர்களை பயன்படுத்தி “அசிறிமத் மினிசா“ என்ற காணொளியை தயாரித்ததுடன் கோட்டாபயவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரசாரங்களை செய்துள்ளார்.
எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் காரணமாக திலக்கசிறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது காணொளிகள் மூலம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

எந்த பயிற்சி வகுப்புகளும் இல்லாமல் தினமும் 12 மணி நேரம் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri
