தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டில் இதுவரை 87 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை
ஏனைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தபால் ஊழியர்களின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இருந்தால், தமக்கு கடிதங்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri