மட்டு.மாவட்டத்தில் காச நோயினால் இதுவரை 47 பேர் மரணம் (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்ட்தில் கடந்த 3 ஆண்டுகளில் காசநோய் காரணமாக 47 பேர் மரணித்துள்ளதாகவும், இக்காலப்பகுதியில் 398 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மாவட்ட காசநோய் தடுப்பு வைத்தியதிகாரி டாக்டர். கோணேஸ்வரன் ஆரணி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு 147 பேர் அனுமதிக்கப்பட்டு 17பேர் மரணித்ததாகவும், 2020 இல் 127 பேர் அனுமதிக்கப்பட்டு 19 பேரும், 2021 இல் 124 பேர் அனுமதிக்கப்பட்டு 11 பேருமாக, 47 பேர் இறந்துள்ளனர்.
உலக காசநோய் தினத்தையொட்டி மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை நடாத்திய காசநோய் விழப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போதே இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
