இலங்கையில் மிகக் குறைவாக பாவிக்கப்படும் Snapchat
இலங்கையில் மிகக் குறைவானவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக Snapchat காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழு 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி பயனர்கள்
2024 ஆம் ஆண்டுக்கான ஆணையத்தின் தரவுகளின்படி, Snapchat பயனர்களின் எண்ணிக்கை நாற்பது இலட்சத்து பன்னிரண்டாயிரத்து நூற்று இருபத்தொன்று (4,012,121) ஆகும்.
மேலும், அதே தகவலின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கையடக்கத் தொலைபேசி பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடக வலையமைப்பு Facebook ஆகும்.
பயனர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பது இலட்சத்து முப்பத்தொரு ஆயிரத்து நானூற்று பன்னிரண்டு 15,031,412 ஆகும்.
மேலும், ஒரு கோடியே நாற்பத்தைந்து இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து முந்நூற்று எழுபத்தொரு (14,528,371) YouTube பயனர்கள் உள்ளனர்,
instagram பயனாளர்கள்
WhatsApp பயனர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தொன்பது இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று இருபது (14,928,520) ஆகும்.
Viber பயனர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்து மூன்று (6,068,833) ஆகும்.
இதேபோல், TikTok பயனர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சத்து எழுநுற்றி ஐம்பத்து இரண்டு(10,557,052) அத்தோடு imo பாவனையாளர்களின் எண்ணிக்கை 766,281 ஆகும்.
instagram பயனாளர்கள் 8,470,698 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
