இலங்கையிலிருந்து சென்னைக்கு பெருந்தொகை பணம் கடத்தல்!
கொழும்பில் சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான 5.650 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து பயணிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவசர சோதனை நடத்தியுள்ளனர்.
15 கேப்சூல்கள் கண்டுபிடிப்பு
இதன்போது சென்னைக்கு செல்லவிருந்த பயணிகள் மறைத்து வைத்திருந்த ஜெல் வடிவில் தயாரிக்கப்பட்ட 15 கேப்சூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்த எடை 5650 கிராம் மற்றும் தோராயமாக 107 மில்லியன் ரூபா பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த நபர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் எனவும், சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரெது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam
