பிரித்தானியாவிற்கு பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ள சவால்!
சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கு கடத்தல்காரர்கள் சவால் விடுத்துள்ளார்கள்.
பிரித்தானியா 50 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தினால், நாங்கள் 500பேரை புதிதாக பிரித்தானியாவுக்குள் அனுப்புவோம் என கடத்தல்காரர்கள் சவால் விடுத்துள்ளார்கள்.
2023இல் சுமார் 80,000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையலாம் என உள்துறை அலுவலக அதிகாரிகள் கணித்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் 10 படகுகளில் 442 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
இதேவேளை அதிகாரிகளுக்கு சவால் விடும் கடத்தல்காரர்கள் பிரித்தானிய அதிகாரிகள் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முயற்சி செய்கிறார்களோ, அதே அளவுக்கு கட்டுப்பாடுகளை மீறி புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புவதில் தீவிரமாக செயற்படுகின்றனர்.
சமூக ஊடகங்களில் விளம்பரம்

யாரும் உங்களை பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்ப முடியாது என்று உறுதியாக கூறும் வகையில் கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே பிரித்தானிய பிரதமர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்தும், அதனால் எந்த பயனும் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாக புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri