பளை சோரன்பற்று வீதியில் மணலை கொட்டி விட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள்
பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் அதிகளவான மணல் வீதியில் கொட்டப்பட்ட நிலையில் சிதறுண்டு காணப்படுகின்றது.
இதனால் அந்தவீதி ஊடாக பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வேண்டுகோள்
குறித்த வீதியில் அதிகளவான மணல் மண் சிதறிக் காணப்படுவதால் விபத்துக்கள் இடம்பெற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
நேற்று இரவு மணல் கடத்தல்காரர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மணல் மண்ணை குறித்த வீதியில் கொட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாளாந்தம் வடமராட்சி கிழக்கில் இருந்து தமது கிராமம் ஊடாகவும், தமது கிராமத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கும் அதிகளவான மணல் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகவும் பொலிஸார் இதனை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பளை சோறன்பற்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







