மாத்தளையில் பதிவான சம்பவம்! கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ரமேஷ் பத்திரன
மாத்தளையில் மக்கள் குடியிருப்பு உடைக்கப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், குறித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அகற்ற உதவி மேலாளர் நேரடியாக தலையிட்டுள்ளார். அவரை உடனடியாக கட்டாய விடுப்பில் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டேன்.
முறையான விசாரணை முன்னெடுப்பு
அதன்படி தற்போது அந்த அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு சென்றார்.
24 மணிநேரத்திற்குள் அவர் அங்கு சென்றார். தோட்ட மக்களின் உரிமைகளை பறிப்பது பாரிய பிரச்சினையாகும். இந்த நடவடிக்கை நியாயமற்றது. எனவே உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



