கையடக்க தொலைபேசிகளை தவிர்க்கும் இலங்கை மக்கள்! தலைசுற்ற வைக்கும் விலை அதிகரிப்பு
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பதாயிரம் ரூபா என்ற வரம்பில் உள்ளது.
அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், சமீபகாலமாக வரி உயர்த்தப்பட்டதாலும் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 90,000 என்ற வரம்பை விரைவில் எட்டும் என விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொலைபேசிகளை தவிர்க்கும் இலங்கை மக்கள்
அதே சமயம், தொலைபேசிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதால் இலங்கை மக்கள் தொலைபேசி கொள்வனவினை தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விற்பனை ஏதும் இல்லாமலும் சில தொலைபேசி விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri