இலங்கையில் பொருட்களின் விலைகளில் பாரிய மாற்றம்! தொலைபேசி விலை தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள், எரிவாயு பிரச்சினை நீடிக்கும் நிலையில் அரசாங்கம் விதித்த வரி காரணமாக பல பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததுள்ளது.
அத்துடன், 4 வீதத்தால் வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியொன்றின் விலை தற்போது 80,000 ரூபாவை விடவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு மேலதிகமாக அதனை பயன்படுத்தும்போது அறவிடும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri