வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை
வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார்.
பருவகால மழை, கடந்த வருட இறுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் அவற்றின் நீர் கொள்ளவினை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக அளவினை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோகம் நெற் செய்கை மேற்கொள்ளப்டவுள்ளது.
சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள்
அதன்படி, 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 16 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
