மெக்சிகோவில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்! 7 பேரின் உடல்கள் கண்டுப்பிடிப்பு
மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது.
நொறுங்கிய விமானம்
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்துள்ளார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
A Cessna Citation 3 crashed while attempting a go around, in Toluca, Mexico , 10 people dead, including crew.
— Aviation Daily (@aeroworldx) December 15, 2025
Investigation is underway… pic.twitter.com/gzrAExEZ44
இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணங்கள்
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.