அரசாங்கத்தை விமர்சித்தால் அவசர்களின் காதில் பிடித்து வெளியில் தள்ள வேண்டும்: ஆளும் தரப்பு உறுப்பினர் அதிரடி
அரசாங்கத்தில் இருக்கும் சிறிய கட்சிகள் சிறப்புரிமைகளை அனுபவித்துக்கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக அவர்களின் நிலைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்தால், அவர்களை காதில் பிடித்து வெளியில் தள்ளுமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தமது நிலைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் ஏனைய சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் இருப்பார்களாயின் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து பதவி விலக வேண்டும் அல்லது அவர்கள் தூக்கி எறியும் நிலைமைக்கு தள்ளப்பட வேண்டும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் நடத்தையானது அரசாங்கத்திற்கு பாரதூரமான பிரச்சினை.
அரசாங்கத்துடன் இருந்துக்கொண்டு சகல சிறப்புரிமைகளையும் பெற்று வரும் சிறிய கட்சிகள் இறுதியில் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன எனவும் குட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri