19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த யாழ்.மைந்தன்
19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணி வெற்றி
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 242 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷூக்கு எதிராக கொழும்பு சி.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 98 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
யாழ் மைந்தன்
போட்டியில் அறிமுக வீரரான யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 5 விக்கட்டுக்களை கைப்பற்றி போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.
17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றபோதும் தனது அறிமுகப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
இதற்கு அமைய இரண்டு வயது பிரிவுகளில் அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஆகாஷ் படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
