வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Batticaloa Anura Kumara Dissanayaka Eastern Province Crime
By Rusath Jan 28, 2025 03:30 PM GMT
Report

தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரால் தாக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்தச் சபை நடத்துனர் நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்றையதினம் (27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை வாழைச்சேனை சாலையில் பேருந்து நடத்துநராகக் கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.

கிளிநொச்சியில் நெல்கொள்வனவு தொடர்பில் சோதனை நடவடிக்கை

கிளிநொச்சியில் நெல்கொள்வனவு தொடர்பில் சோதனை நடவடிக்கை

தாக்குதல்

அந்தக் கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2025-01-22ஆம் திகதி எங்களது பேருந்து வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் | Sltb Director Letter To President Seeking Justice

அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணி, எமக்கு வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கும் நேரமாகும். இந்தநிலையில், எமக்குரிய நேரத்தில் எமது பேருந்து வண்டிக்கு முன்னால் மற்றுமொரு தனியார் பேருந்து, அந்த இடத்தில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக் கொண்டிந்தார்கள்.

அந்தநேரம், நான் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் மற்றும் இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பேருந்திற்குள் ஏறி வந்து எனக்கு தலையில் அடிக்க முற்பட்டனர்.

அப்பொழுது நான் தடுத்ததேன்.அடி எனது கையில் பட்டதோடு, இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து பின்பு என்னை பேருந்திலிருந்து வெளியில் இழுத்தெடுத்து தாக்கினார்.

தாக்கியவர்கள் என் கையிலிருந்த பயணச்சீட்டு இயந்திரத்தையும் பறித்தெடுத்து என் கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதிக்கு கடிதம்

அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு மாற்றி கடந்த 2025-01-24 ஆம் திகதி மாலை வீட்டிற்கு வந்தேன். அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.

வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் | Sltb Director Letter To President Seeking Justice

தற்போது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார் பேருந்து வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றைய இருவரையும் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே எமது சாலை பேருந்து சாரதி, நடத்துநர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. இவர்கள் அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றவர்கள்.

இது இவ்வாறிருக்க, இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை சாலையால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு சாலை முகாமையாளர் தனியார் பேருந்து நபர்களோடு சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகின்றார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத்தருமாறு தங்களை மிகத் தயவாய் கேட்டுக்கொள்கிறேன் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்: அரசியல் ஆய்வாளர் கோரிக்கை

தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்: அரசியல் ஆய்வாளர் கோரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US