இ.போ.ச. பேருந்துகளுக்கு தொடரும் நெருக்கடி! தனியார் போக்குவரத்துச் சங்கம் மீது குற்றச்சாட்டு

Sri Lankan Peoples
By Erimalai Oct 16, 2026 05:48 AM GMT
Report

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதால், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக பருத்தித்துறை போக்குவரத்துச் சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் பல தடவைகள் தமது பேருந்துகள் வழிமறிக்கப்படுவதுடன், சாரதிகளும் அச்சுறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நெருக்கடி

இதனால், பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுப்பதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இ.போ.ச. பேருந்துகளுக்கு தொடரும் நெருக்கடி! தனியார் போக்குவரத்துச் சங்கம் மீது குற்றச்சாட்டு | Sltb Buses Face Threats Disruptions Vadamarachchi

அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில், குறித்த பிரச்சினைகள் தொடர்பாக வடமராட்சிக் கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் தலையிட்டு தீர்வுகள் எட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 சாரதியுடன் முரண்பாடு

எனினும், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இ.போ.ச. பேருந்துகளுக்கு தொடரும் நெருக்கடி! தனியார் போக்குவரத்துச் சங்கம் மீது குற்றச்சாட்டு | Sltb Buses Face Threats Disruptions Vadamarachchi

நேற்றைய தினமும் கேவில் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கவிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் முன்பாக ஒருவர் தனது உந்துருளியை நிறுத்தி, பேருந்து சாரதியுடன் முரண்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளியை பருத்தித்துறை சாலை அதிகாரிகள் எமது செய்திச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் காணொளியில், ஒருவர் பேருந்தில் ஏறி அதனை நிறுத்துவதுடன், சாரதியுடன் முரண்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்களால் பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US