கொழும்பு - கண்டிக்கு மாற்று தொடருந்து பாதை
கொழும்பு - கண்டிக்கு மாற்று தொடருந்து பாதையை உருவாக்குமாறு அரசாங்கத்தை இலங்கை போக்குவரத்து மற்றும் திட்டமிடலுக்கான சங்கம் (SLSTL) வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பழமையான தொடருந்து உட்கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை டிட்வா சூறாவளி வெளிப்படுத்தியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
டிட்வா ஏற்பட்ட சேதம்,பிரதான பாதையில் - பல பகுதிகளை கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.மேலும் பேராதெனியவுக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கட்டமைப்பு இன்னும் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மாற்று பாதை
150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கட்டப்பட்ட இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பு, சூறாவளி, நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் சுனாமி உள்ளிட்ட தீவிர அனர்த்தங்களின் போது அதிகளவில் பாதிப்படைகிறது.
தற்போதைய நெருக்கடி ரயில்வே திட்டமிடல் மற்றும் நீண்டகால புனரமைப்பு மற்றும் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு திருப்புமுனையாகக் இதை கருதப்பட வேண்டும் என SLSTL கூறியது.

2017 ஆம் ஆண்டில், இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்துடன் (IESL) இணைந்து கண்டிக்கு மாற்று ரயில் பாதையை முன்மொழிந்ததை சங்கம் நினைவு கூர்ந்தது. இந்த திட்டம் இப்போது முன்னெப்போதையும் விட இன்று பொருத்தமானதாகும்.
பாதுகாப்பான மிகவும் மீள்தன்மை கொண்ட மற்றும் பாதைகளை நோக்கி தொடருந்து போக்குவரத்து மாற்றமடைய வேண்டும் என SLSTL வலியுறுத்தியுள்ளது.
[F3E1RZW }