இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன்களாக குறைந்துவிட்டது- ரணில் விக்கிரமசிங்க தகவல்!
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இளம் தொழில் வல்லுநர்களிடம் பேசிய விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கடந்த வாரத்தில் இந்த கையிருப்பு 50 மில்லியன் டொலர்கள் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்த நிலையிலேயே ரணிலின் தகவல் வெளியாகியுள்ளது
அரசாங்கம் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, மக்களுக்கு சாத்தியமான நிவாரணங்களை வழங்க வேண்டும்.
இந்தநிலையில் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்க நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களின் நிலுவைக் காரணமாக உள்ளூர் வங்கிகள் வீழ்ச்சியடையும்.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிகபட்சம் ஓரிரு வருடங்கள் ஆகும் என்றும் ரணில் கூறினார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
