தேர்தலில் மொட்டு வெல்லும்: மார்தட்டுகின்றார் சந்திரசேன எம்.பி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்போது கிராமங்களுக்குச் செல்ல முடிகின்றது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (08.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.
நிச்சயம் வெற்றி
வரிசை யுகத்தால் எமக்குக் கிராமங்களுக்கு செல்ல முடியாதிருந்தது. தற்போது வரிசை யுகம் இல்லை.
உரப்பிரச்சினை இல்லை. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவுள்ளது.
எனவே, நாடு நெருக்கடியில் இருந்து மீளும்.
இதனை விரும்பாத சிலரே அரசின் திட்டத்தைச் சீர்குலைக்க முற்படுகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது தெரியாது.
தேர்தல்
நடந்தால் அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
