ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்கப்படாது: சாகர காரியவசம்
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு இடமளிக்கப்படாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எக்காரணத்திற்காகவும் ஒத்தி வைக்கப்படக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முனைப்புகளுக்கும் தமது கட்சி துணை நிற்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாலித ரங்கே பண்டாரவின் கருத்து
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து பொது வாக்கெடுப்பு நடத்தி தற்போதைய ஜனாதிபதிக்கு இரண்டாண்டு காலம் ஆட்சியை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சாகர காரியவசம் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு குறித்து கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |