எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர
எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அமைப்பது தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பலமில்லாத உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை குழப்பும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாத காலத்தில் பொதுஜன முன்னணியின் வாக்கு பலம் 300 வீதமாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நேசிக்கும் மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நாய் இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை News Lankasri

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு! திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 46 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல் News Lankasri
