மொட்டு கட்சிக்கான ஆதரவு குறையவில்லை! சாந்த பண்டார
மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
69 இலட்ச மக்களை தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்ள எவராலும் முடியாது. அவ்வாறு நினைத்திருந்தால் அவர்களுக்கு அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமை கொண்டாடுவதில் ஆர்வம்
அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அந்த மக்களுக்கு உரிமை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கான ஆதரவு குறிப்பிட்டளவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியினர் வேறு ஓர் தரப்பில் இணைந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 13 நிமிடங்கள் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
