மொட்டு கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் என கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரையில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததன் பின்னர் ஊடகவியலாளாகளிடம் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
விலகிச் செல்லவும் தயார்
யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்தும் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவம் இது குறித்து தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளையோருக்கு சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில் தேசிய அமைப்பாளர் பதவியை விட்டுக் கொடுத்ததாகவும், கட்சியின் சாதாரண உறுப்பினரான இருந்து கொண்டு கட்சிக்காக சேவையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளவும் விலகிச் செல்லவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
