ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன்(Samagi Jana Balawegaya) உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ்(G.L.Peiris) மற்றும் ஏனையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுவின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
தேர்தல் ஒப்பந்தம்
இந்தநிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்கள் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, தமது கட்சியின் மூலம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வேறொரு கட்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri