ரணிலைக் கைவிட்ட மொட்டுவின் மைந்தர்கள்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று விசேடமாக எமது குழு ஒன்று கூடி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினோம்.
குறிப்பாக சிங்கள வருடப் பிறப்பிற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்
அப்படியானால் அந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாம் எவ்வாறு தயாராகி வருகின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். எனினும் சிலிண்டருடன் போட்டியிடுவதற்கு எதிர்பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு எதிர்க்கட்சி பலமாக மாறும்.
மேலும், உள்ளுராட்சி தேர்தலில் பலமான எதிர்க்கட்சியுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரியவரும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |