முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
கூழாமுறிப்பு கிராமத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் அவரின் குடும்ப சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கத்திக்குத்தும் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த குடும்பஸ்தர் மீது வீட்டில் வைத்திருந்த இடியன் துப்பாக்கியால் மற்றையவர் சுட்டதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தப்பி சென்ற நிலையில் காயமடைந்த நபரிடம் இருந்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் வாய்முறைப்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை, சம்பவம் குறித்து மேலதிக விசாரணகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam