ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரை நிரூபிக்கும் ஆதாரங்கள்!
மனிதர்கள், விவிலிய கதாபாத்திரங்களான ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினர் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரையின் மொழிப்பெயர்ப்பை இங்கே தருகிறோம்.
கடவுளால் படைக்கப்பட்ட மனித இனம்
இந்த இருவரின் இருப்பை பலர் மறுக்கும்போது, ஆதாமும் ஏவாளும் கடவுளால் படைக்கப்பட்டு மனித இனத்தை உருவாக்கினர் என்பதை மூன்று முக்கிய மதங்களான, கிறிஸ்தவம், யூதம் மற்றும் இஸ்லாம் என்பன ஒப்புக்கொள்கின்றன.
இந்தநிலையில்,பைபிளின் பக்கங்களுக்கு அப்பால் ஏதேன் தோட்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர்.
ஏதேன் தோட்டம்
ஏதேன் தோட்டம், ஒரு புராண இடம் மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் தொட்டிலாகவும் இருந்ததற்கான அறிகுறிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
ஏதேன் தோட்டம் பண்டைய மெசபடோமியாவில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது, இது இன்று ஈராக்கின் பெரும்பகுதியையும் சிரியா, ஈரான் மற்றும் துருக்கியின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
இதற்கிடையில், அனைத்து மனிதர்களும் ஒரு பொதுவான மூதாதையரைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று உயிரியலாளர்கள் வலியுறுத்துகின்றனர் என்பதையும் சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஆதாமும் ஏவாளும் என்ற கதை, கிட்டத்தட்ட எந்தவொரு கிறிஸ்தவருக்கும் உடனடியாகத் தெரிந்திருக்கும் கதையாக அமைந்துள்ளது.
உண்மையில் ஆதாமும் ஏவாளும் இருந்தார்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துகின்றனர்.
பைபிளின் படி, ஆதாமும் ஏவாளும் பூமியில் உருவாக்கப்பட்ட முதல் ஆணும் பெண்ணும் ஆவர்.
அவர்கள், தூசியால் உருவாக்கப்பட்டதாகவும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது
இது வெகு தொலைவில் உள்ள ஒரு கதையாக தோன்றினாலும், கதையின் சில பகுதிகளாவது உண்மையாக இருக்கலாம் என்பதைக் குறிக்கும் வகையில் சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஏதேன் ஒரு உண்மையான இடம் மட்டுமல்ல, நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இருந்திருக்கலாம் என்பதற்கான அடையாளங்களை கண்டறிந்துள்ளனர்.
பைபிளில், ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டம் என்ற இடத்தில் வசித்தார்கள் என்றும், இது மிகுதியான அழகான நிலம்,அத்துடன் சுவாரஸ்யமாக, இந்த மாய தோட்டம் அமைந்துள்ள இடம் என்றளவில் விளக்கம் வழங்கப்படுகிறது
இந்தநிலையில் ஒரு நதி ஏதேன் வழியாக பாய்ந்து நான்கு கிளைகளாகப் பிரிகிறது என்று பைபிள் கூறுகிறது
பிசோன், கீஹோன், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் என்பனவே அந்த நதிகள் என்றும் பைபிள் கூறுகிறது.
இவற்றில், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் என்பன நன்கு அறியப்பட்ட நிலையில் தற்போதும் ஈராக் வழியாக பாய்கின்றன.
இருப்பினும், கீஹோன் மற்றும் பிசோன் ஆகிய நதிகள் தொடர்பில் தெளிவற்ற தன்மையே உள்ளது அவற்றின் இருப்பிடங்கள், இன்னும் கண்டறியப்படவில்லை.
ஈரான் மற்றும் மங்கோலியா முதல் ஜாக்சன் கவுண்டி மிசோரி வரை, குறித்த ஏதேன் தோட்டம் உண்மையில் எங்கிருந்திருக்கலாம் என்பதற்கான ஏராளமான பரிந்துரைகளுக்கு இந்த ஆதாரங்கள் வழியை வகுத்தன.
இருப்பினும், மிகவும் நம்பிக்கைக்குரிய கோட்பாட்டின்படி, ஏதேன் தோட்டம் மெசபடோமியா என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தநிலையில், பைபிளில், ஆதாமும் ஏவாளும் யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் என்று விபரிக்கப்படும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தனர். இது மெசபடோமியா பகுதியை சேர்ந்தது என்று தெரிவிக்கப்படுகிறது
ஏதேன் தோட்டம் இயேசு வாழ்ந்த இஸ்ரேலின் கிழக்கு பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. இது நவீன ஈராக்கைச் சுற்றி எங்காவது அமைந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது
பைபிளின் படி, ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்துள்ளனர் தற்போது உயிருடன் இருக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த ஆரம்பகால முதல் மனிதர், உயிருடன் இருந்த ஒரே மனிதராகவோ இருந்திருக்க மாட்டார். என்பது அறிவியலுடன் பொருந்தக்கூடிய தன்மையாக கூறப்படுகிறது.
இதன்படி, அனைத்து மனிதர்களும் பரம்பரை ரீதியாக ஒரே ஜோடியிலிருந்து வந்திருப்பதைத் தடுக்க எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இருப்பினும், இந்த ஜோடி அந்த நேரத்தில் பூமியில் வாழ்ந்த பல மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கும், மேலும் முன்னைய ஹோமினின்களிலிருந்து பரிணமித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தநிலையில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பைபிள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் எரிக் க்லைனின் கருத்துப்படி, இந்த ஏதென் தோட்டம், இஸ்ரேலின் கிழக்கே அமைந்திருந்தது என்று கூறுவது மட்டுமல்லாமல், ஏதேன் தோட்டத்துடன் தொடர்புடைய டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளையும் குறிப்பிடுகிறது.
அத்துடன், இந்தப் பகுதி 10,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர், புதிய கற்காலப் புரட்சி என்று அழைக்கப்பட்ட காலத்தில் முதல் தாவரங்களும் விலங்குகளும் வளர்க்கப்பட்ட இடமாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
பேராசிரியர் கிளைனின் கூற்றுப்படி, கிறிஸ்துவுக்கு முன் நான்காம் மிலேனியத்தில் நீர்ப்பாசனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பகுதி உள்ளூர்வாசிகளுக்கு ஓரளவு விவசாய சொர்க்கமாகவும் மாறியிருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த விடயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, படைப்பு பற்றிய விவிலியக் கணக்கிற்கும் இந்தப் பகுதியிலிருந்து வந்த மிகப் பழமையான கட்டுக்கதைகளுக்கும் இடையே சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன.
சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒற்றுமையை விளக்குவதற்கான சிறந்த வழி, சுமேரிய புராணமாகும்.இது கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் இஸ்ரேலியர்களுக்கு கிடைத்தது.
அது உண்மையாக இருந்தால், ஆதாம் மற்றும் ஏவாளின் பைபிள் கதை, நவீன கால ஈரானைச் சுற்றி எங்கோ நடந்த நாகரிகத்தின் தோற்றம் பற்றிய ஒரு பண்டைய கதையை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தநிலையில் ஒவ்வொரு மனிதரிலும் டிஎன்ஏ என்ற மரபணு எவ்வளவு காலத்துக்கு முன்னர் இருந்தது என்பதை விஞ்ஞானிகள் 'மரபணு கடிகாரத்தை' பயன்படுத்தி கண்டுபிடிக்கிறார்கள்.
1987 ஆம் ஆண்டில், மரபியல் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள 147 பேரின் மைட்டோகொண்ட்ரியல் டிஎன்ஏவைப் பார்த்தார்கள். அதன்படி, ஏவாள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
அதேபோல், 2013 ஆம் ஆண்டு சார்டினியாவைச் சேர்ந்த 1,200 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆதாம் சுமார் 180,000–200,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பார் என்பதைக் காட்டுகிறது.
இந்தநிலையில் நிச்சயமாக, மனிதர்கள் அனைவரும் ஒரு ஜோடி மனிதர்களிடமிருந்து வந்தவர்கள் என்று எந்த விஞ்ஞானிகளும் உண்மையில் நம்பவில்லை.
இந்தநிலையில் ஆதாமும் ஏவாளும் அப்போது பூமியில் வாழ்ந்த பல மனிதர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள். பொதுவாக, மூதாதையர்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்திருக்கலாம், கிட்டத்தட்ட ஒருபோதும் சந்தித்ததில்லை - ஒன்றாக குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டார்கள் என்ற கருத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
இதற்கிடையில் வோசிங்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ஜோசுவா சுவாமிதாஸ், மனிதகுலம் ஒரு ஜோடியிலிருந்து வந்ததல்ல என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று வாதிட்டுள்ளார்
அத்துடன் அவர், ஆதாம் மற்றும் ஏவாளின் இருப்பை கேள்விக்குட்படுத்தவில்லை
மனித பரிணாமக் கோட்பாட்டில் ஒரு ஜோடி பண்டைய மனிதர்கள் அனைத்து உயிரினங்களின் பொதுவான மூதாதையர்களாக இருக்கலாம் என்று பொதுவாக விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
அத்துடன், உயிருள்ள அனைத்து மனிதர்களும் இந்த உலகளாவிய மூதாதையர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் வந்தவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர்களில் இருவரே வேதத்தில் ஆதாம் மற்றும் ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஜோடியாக இருக்கலாம்,
அவர்களிடமிருந்து நாம் அனைவரும் வந்தவர்களாக இருக்கிறோம் ஆதாமும் ஏவாளும் இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதனின் நேரடி மூதாதையர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், சில அறிஞர்கள் கடந்த காலத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்துள்ளனர்.
ஹ_ஸ்டன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தத்துவஞானி பேராசிரியர் வில்லியம் லேன் கிரெய்க், ஆதாமும் ஏவாளும் உண்மையிலேயே மனிதராக இருந்த முதல் மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
ஆதாம் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான மூதாதையராக இருக்க வேண்டுமென்றால், அவர் முதல் மனித இனத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று லேன் கிரெய்க் கூறுகிறார்.
எனவே, ஆதாம் ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனத்தின் உறுப்பினராகவும், 750,000 முதல் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வாழ்ந்ததாகவும் வில்லியம் லேன் கூறியுள்ளார்
இதன்படி ஆதாம் சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் 750,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக்கலாம், இது மக்கள்தொகை மரபியலின் சான்றுகளுடன் ஒத்துப்போகிறது. இந்தக் கூற்றில் சாத்தியமற்றது எதுவும் இல்லை என்ற வாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார்
இருப்பினும், மனித பரிணாம வளர்ச்சியின் தற்போதைய கோட்பாடுகளில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு அர்த்தத்தில் ஒரு அசல் ஆதாம் மற்றும் ஏவாள் ஜோடி இருந்தது என்பது இன்னும் குறிப்பிடத்தக்க உண்மையாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Indrajith அவரால் எழுதப்பட்டு, 09 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.