2000 ரூபா அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்: அநுரவிடம் கோரிக்கை
தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் வரவு - செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டும். தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வரி சலுகையாக வழங்கி இந்த சம்பள உயர்வை வழங்கும்படி அரசை கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கடந்த நாடாளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் பின் தங்கிய தொடர்பில் இதே இடத்தில் நாம் கொண்டு வந்த பிரேரணைகளில் கலந்து கொண்டு, இன்றைய ஜனாதிபதி நண்பர் அநுர குமார திசாநாயக்க தீவிரமாக உரை நிகழ்த்தினார்.
அதை மனதில் கொண்டு நண்பர் அநுரவை நோக்கி நேரடியாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களான பெருந்தோட்ட மக்களை கைதூக்கி விடாமல் நாட்டில் உண்மை சமத்துவம் ஏற்பட முடியாது” என கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |