பிரான்ஸில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்பு
பிரான்ஸில் (France) உள்ள பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள ஒரு விளம்பரத்திற்கு ஈரான் (Iran) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த குப்பைகளை பிரித்து போட மறக்காதீர்கள் என எழுதப்பட்டுள்ளதுடன் ஈரானின் உச்ச தலைவரான கமேனி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன் ஆகியோரின் படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தெற்கு பிரான்சிலுள்ள Beziers நகரிலுள்ள பேருந்துகளில் குப்பைகளை வெவ்வேறாக பிரித்து போடுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சர்வதேச தலைவர்கள்
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட நாட்டு தலைவர்களின் புகைப்படங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள குறித்த விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வெளியாக, ஈரான் அதற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தில் மேற்கு ஐரோப்பாவுக்கான டிரக்டர் ஜெனரலாக பொறுப்பு வகிக்கும் Majid Nili, அந்த நகரத்தின் செயல் தங்கள் நாட்டின் புனித தன்மையையும் தங்கள் நாட்டவர்களையும் அவமதிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கோபத்தைத் தூண்டும் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பிரான்ஸ் அரசையும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
