ஒரே நாளில் பாரிய பின்னடைவை சந்தித்த இலங்கை ரூபா
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 286.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது இன்றையதினம் 291.75 ரூபாவாக சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
டொலர் மற்றும் யூரோ
இந்த நிலையில், நேற்றையதினம் 300.52 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 300.31 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.27 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 311.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.59 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.04 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
