வரவு - செலவு திட்டம் குறித்து மொட்டு இன்னும் முடிவு இல்லை: ரஞ்சித் பண்டார
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கட்சியாகவே இறுதியான – உறுதியான முடிவு எடுக்கப்படும்" என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வாக்குக் கேட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, பின்னர் சுயாதீனமானவர்களே கட்சி மீது கல்லெறிகின்றனர்.
சிறியதொரு சவால்
இது பற்றி நாம் பதற்றம் அடையவில்லை. அந்தக் கற்களை வைத்து பாதை அமைத்து பயணிப்போம். எமது பயணம் மெதுவானதாக இருக்கலாம்.
ஆனால், இலக்கு நோக்கியது. தற்போது கல்லெறிபவர்கள் அப்போது பார்வையாளர்களாக மாறுவார்கள். அவர்களுக்குப் பெரிய சவால் அல்ல, சிறியதொரு சவாலை விடுக்கின்றேன், முடிந்தால் அடுத்துவரும் ஏதேனும் ஒரு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுங்கள்." என தெரிவித்துள்ளார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
