பொதுஜன பெரமுனவுக்கு 3 மாடிகளை கொண்ட தலைமையகம்:வெளிநாடு செல்லும் முன் திறந்து வைத்த பசில்
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri lanka Podujana Peramuna) தலைமையக கட்டடம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமையகம் மூன்று மாடிகளை கொண்ட கட்டடமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தை நிதியமச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அண்மையில் திறந்து வைத்துள்ளார்.
அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளதுடன் எளிமையான முறையில் நடத்தப்பட்ட இந்த திறப்பு விழாவில் மிக குறைவான நபர்களே கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான அரசியல் செயற்பாட்டாளர்கள் மாத்திரமே கலந்துக்கொண்டுள்ளனர்.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

மாறுங்கள், இல்லையென்றால்... இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
