ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்கள்: மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவு தெரிவிக்கும் தமது கட்சியின் மாவட்டத் தலைவர்களை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத் தலைவர் பிரசன்ன ரணதுங்க, காலி மாவட்டத் தலைவர் ரமேஷ் பத்திரண, கண்டி மாவட்டத் தலைவர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் அனுராதபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தத்தமது பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்கு மொட்டுக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மகிந்தவின் தீர்மானம்
கட்சியின் தேர்தல் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) தீர்மானித்திருந்தமை குறப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
