மக்களை ஏமாற்றும் வரவு - செலவுத் திட்டம்: கடுமையாக விமர்சிக்கும் மகிந்த அணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு - செலவுத் திட்டத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நேற்று (08.11.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குறுகிய காலப் பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு - செலவுத் திட்டத்தில் இல்லை.
மக்களை ஏமாற்றும் திட்டம்
உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டல் இல்லை. இலக்கங்களைக் குறிப்பிடலாம். அதனை அடைவதற்குரிய வேலைத்திட்டமும் பாதீட்டில் இல்லை.

ஆக மொதத்தத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமே இதுவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க முயற்சிக்கும் தாவூத் இப்ராஹிம்.. அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan