மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : சஞ்சீவ எதிரிமான்ன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக போட்டியிடுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்(Sri Lanka Podujana Peramuna) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டு கட்சியின் சின்னம் நிச்சயம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி கட்சி
மொட்டு கட்சியின் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகமான வழிமுறைகளில் மொட்டு கட்சியின் வேட்பாளரை ஜனாதிபதியாக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கஸ்டங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என சஞ்சீவ எதிரிமான்ன கூறியுள்ளார்.
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri