அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலார் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கற்றல் நடவடிக்கைகள்
எதிர்வரும் 22ம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.
இதன்படி கற்றல் நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இந்த காலத்தில் விலகியிருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
