ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பசிலுடன் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்
இதேவேளை, பசில் ராஜபக்ச கட்சியின் உறுப்பினர்களை தற்பொழுது சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குழுக்களாக அவர் கட்சி உறுப்பினர்களை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ரீதியில் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan