அரசாங்க காணியை முறைகேடாக குத்தகைக்கு விட்ட மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் கைது
அரசாங்க காணியொன்றை முறைகேடான வழியில் குத்தகைக்கு விட்ட மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் வசித்து வந்த மொட்டுக் கட்சியின் ஆனமடுவை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியொன்றை வெளிநாட்டவர் ஒருவருக்கு முறைகேடான வழியில் குத்தகைக்கு விட்டுள்ளார்.

ஆனமடுவை பிரதேச சபை உறுப்பினர் கைது
அதன் மூலம் அரசாங்கத்துக்கு 24 மில்லியன் ரூபா நிதிஇழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.