ரஷ்ய ஆதரவு நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு
ரஷ்ய ஆதரவு நாடான ஸ்லோவாகியா(Slovakia) நாட்டின் பிரதமர் ரோபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச்சூட்டின் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலை இன்னும் மோசமாக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.
தொடர் சிகிச்சை
‘‘பிரதமர் ஃபிகோவின் உடலின் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன. அதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரின் நிலையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை பிரதமருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அறுவை சிகிச்சையில் இரு குழு மருத்துவர்கள் பங்கு வகித்துள்ளனர்” என ராபர்ட் கலினாக் கூறியுள்ளார்.
இடதுசார்புடைய பிரதமரான ராபர்ட் பிகோ ரஷ்ய ஆதரவாளராகவும் அறியப்படுகிறார். இந்நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் இடம்பெறவுள்ள ஐரோப்பிய தேர்தலில் இது தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 10 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
