தொலைபேசி சின்னம் காலமாகி விட்டது: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அறிவிப்பு
தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் அதை ஆதரிக்கக்கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
தொலைபேசி சின்னம் நீண்ட காலமாகிவிட்டது. அதற்காக தாங்கள் வாக்குகளைக் கோர மாட்டோம், என்று ஹக்கீம் தனது உரையின் போது கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடனான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறவு குறித்தும் ஹக்கீம் இதன்போது அவர் எதிர்க்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த முறை, உள்ளூராட்சித் தேர்தல்களில் நாங்கள் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம். கண்டியில் கூட, நாங்கள் 11 சபைகளில் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் 3 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார்கள், அதுவும், அவர்களின் சொந்த விருப்பப்படி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
