குச்சவெளி பிரதேச சபையை கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
குச்சவெளிப் பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர், ஊப தவிசாளர் தெரிவு இன்று (24) ழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்படி, தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் மனாப் ரிஸான் போட்டியிட்டனர்.
தவிசாளர் தெரிவு
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சபையை கைப்பற்றியதுடன் 07 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை கோரி சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது. தவிசாளராக தெரிவாகியவர் ஒன்பது திறந்த வாக்கால் தெரிவாகினார். உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த வகார்தீன் முகம்மது இம்ஜாத் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான உடன்படிக்கையின் படி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் தவிசாளர் பதவியை வகிப்பது என்றும் தொடர்ந்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் தவிசாளர் பதவியை வகிப்பது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
உறுப்பினர் தெரிவு
இன்றைய தவிசாளர் தெரிவில் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 உறுப்பினரில் 16 உறுப்பினர் கலந்து கொண்டனர்.
இவர்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 5, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த 4, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4, ஐக்கிய மக்கள் சக்தி 2, சுயற்சைக் குழு 1 என இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.தேசிய மக்கள் சக்தி சபை அமர்வை புறக்கணித்திருந்தது.
காணொளி-கியாஸ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri