பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்: சாரதி தப்பியோட்டம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிக்சை
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாதசாரி உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதியவுடன் சாரதி மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை
இந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்யவதற்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்து குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri