அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகத் தொடரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் முரண்பாடு காரணமாக, 2025ஆம் ஆண்டு முதல் SLFP சர்ச்சைக்குரிய செயலாளர் பதவியைக் கொண்ட கட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 2026, நவம்பர் 6ஆம் திகதி இரு தரப்பினரையும் தேர்தல் ஆணைக்குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பதவி தொடர்பான சர்ச்சை
இந்த நிலையில், செயலாளர் பதவி தொடர்பான இறுதி முடிவு, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரே எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் நீக்கப்படவில்லை செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை மட்டுமே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாக,தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.