நுவரெலியாவில் பெய்த ஆலங்கட்டி மழை! வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video)
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளை கடும் மழை பெய்து வருகிறது.
ஆலங்கட்டி மழை
அட்டன் பகுதிகளில் இன்று (08) பண்டாரநாயக்கபுர, இந்துமா சபை, தும்புறுகிரிய, ஆரியகம உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஆலங்கட்டி மழை பெய்ததாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அட்டன்- கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களிலும் பனியுடனான காலநிலை நிலவி வருகிறது.
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியாவில் வசந்த காலம் ஆரம்பித்துள்ளதனால் நுவரெலியாவை நோக்கி விடுமுறையினை கழிப்பதற்காக அதிகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் வருகை தருகின்றனர்.
எனவே வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும்
அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார்
சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.






