20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்
கடந்த இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத், தனது 36ம் வயதில் காலமானார்.
இளவரசர் கலித் பின் தலால் “தூங்கும் இளவரசர்” என அழைக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஏப்ரலில் பிறந்த அவர், சவூதி பேரரசர் கலித் பின் தலால் அல் சவூத் என்பவரின் மகனும், புகழ்பெற்ற பணக்கார இளவரசர் அல்வலீத் பின் தலாலின் உறவினருமாவார்.
இளவரசர் அல்வலீத் பதிலளிக்கும் காணொளிகள்
2005 ஆம் ஆண்டு, லண்டனில் இராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 15 வயதில், அவர் கடுமையான சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் தலையில் கனமான காயங்கள் மற்றும் உட்புற இரத்தக்கசிவு ஏற்பட்டது. அமெரிக்க மற்றும் ஸ்பெயின் மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சையையும் எதிர்கொண்டும், அவர் முழுமையாக உணர்வில் திரும்பவில்லை.
சில சமயங்களில் நுண்ணிய அசைவுகள் காணப்பட்டதால், குடும்பத்தினர் மீளும் நம்பிக்கையை இழக்கவில்லை. அவரது தந்தை இளவரசர் கலித், உயிர்காப்பு உதவிகளை நீக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனைகளை நிராகரித்து, இறைவனின் மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து, 20 ஆண்டுகள் மகனை அனுதினமும் பராமரித்து வந்தார்.
குர்ஆன் ஓதும் சத்தத்துக்கு இளவரசர் அல்வலீத் சற்றே பதிலளிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.
இந்நிலையில், அவர் சவூதி அரேபியாவிலுள்ள சிறப்பு மருத்துவமனையொன்றில் காலமானார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 7 நிமிடங்கள் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
