உறங்கும் நேரம் தொடர்பில் உலகில் இலங்கைக்கு கிடைத்துள்ள நிலை
உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை (Sri lanka) 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சராசரி தூக்கத்தின் அளவு
உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உறக்கத்தின் அளவை அடிப்படையாக கொண்டு, உலகில் எந்த நாட்டில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு உறங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரத்தில் மக்கள் அதிகம் உறங்குகிறார்கள் என்பதை கண்டறிய ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பல்கேரியா (Bulgaria), அங்கோலா (Angola) மற்றும் இலங்கை (Sri lanka) ஆகிய நாடுகள் உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் (UK) நகரங்களின் தரவரிசையில் நார்விச் (Norwich) நகரம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam
