ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மனித கடத்தல் : இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைனுக்கு (Ukraine) அனுப்பும் மனித கடத்தல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னணி சண்டைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு செல்லப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனில் செயல்படும் கூலிப்படைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
மேலும், அவர்களுக்கு அதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு நிலத்தில் உயிரை இழக்கும் அபாயம்
மற்றும் அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து அங்கு எந்தவித ஆதரவின்றி இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தாய்நாட்டுக்குப் பல ஆண்டுகளாகப் பெருமை சேர்த்து பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரராகச் சம்பாதித்த அனைத்து சலுகைகளையும், சொத்துக்களையும் இந்த மனித கடத்தலில் சிக்கி இழக்காமல், வெளிநாட்டு நிலத்தில் தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தை தவிர்க்க அனைத்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கும் கடற்படை வலியுறுத்துகிறது.
மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுகின்ற நபர்கள், செயலில் உள்ள இராணுவத்தினர் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் ஏனையவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் கடற்படை தலைமையக தொலைபேசி இலக்கமான 0117192142 அல்லது 0117192250 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
